விழிகளில் இருந்து கொட்டும் கண்ணீர்த்துளி 555

என்னவளே...
என்னோடு நீ கோபம் கொண்டு
எளிதாக சென்றுவிட்டாய்...
உன் கண்ணில் இருந்து
மண்ணில் விழும்...
ஒவ்வொரு துளி கண்ணீருக்கும்
சொந்தம் கொண்டவன் நான்...
என் விழிகளில் இருந்து
கொட்டும் துளி கண்ணீர் கூட...
நாம் பழகிய நினைவுகளை
சொல்கிறது...
மண்ணில் விழும்
என் துளி கண்ணீரும்...
உனக்காகவே அழுகிறது...
முத்தமெனும்
அமுதம் கொடுத்து...
மூச்சுமுட்ட குடிக்கக்
சொன்னவள்...
இன்று பிரிவால் காதல்
தீயில் குடையேதும் இல்லாமல்
நனைய செய்கிறாய்...
உன்னை பிரிந்து நான் வாழும்
இந்த நாட்கள்...
என் மரணத்தின் உச்சம்.....