அம்மாவாகிய அக்காவிற்கு ஒரு மடல்

உன்னை அக்கா என்று மட்டுமே அழைத்திருக்கிறேன் ! என்றும் உன் பெயர் சொல்லி அழைத்தாய் நினைவில்லை! நம் பயணம் இதோ நமக்காக!
எத்தனை அழகான காலம் அது!
நான் அன்னை முந்தானையை பிடித்து பள்ளி சென்ற நாட்களை விட! உன் கை விரல்கள் பிடித்து பள்ளி சென்ற நாட்களே அதிகம்!
உனக்கு தான் எத்தனை பொறுப்பு! என்னை சுமந்து என் மதிய உணவையும் சுமந்து அழகாய் பள்ளிக்கு அழைத்து செல்வாய்! அப்பொழுது நீ ஒன்றாம் வகுப்பு நான் LKG !
மதிய இடைவெளியில் நீ உண்பதில் கொண்ட கவனத்தை விட, நான் உண்பதில் கொண்ட கவனமே அதிகம், அங்கு நீ கண்டிப்பான தாய்!
என்றோ ஒரு நாள் நான் வகுப்பில் மலம் கழித்து விட , என் ஆசிரியர் உன்னை அழைக்க, சற்றும் தயங்காமல் என்னை சுத்த படுத்தியவள் நீ! அப்பொழுது நீ இரண்டாம் வகுப்பு,உன்னை அன்னையென்று கூரமல் என்ன கூருவது!
உன் வெள்ளை சட்டை நீல நிறம் படிந்து அன்னையிடம் அடி வாங்கிய பிறகும் எனக்காய் கொண்டு வரும் நாவல் பலம் என் சேனை பாலுக்கு சமம்!
எண்பதுகளில் பிறந்த குழந்தைகளின் வர பிரசாதமான கட்டில் கடை மாங்காய் , தேன் மிட்டாய்,இழந்த வடை எல்லாம் நான் சுவைத்தது உன் புண்ணியத்தில் தான்!
நீ பூபேய்தியவுடன் ஆண் மகன் என்று துளைவிலும் வைக்காமல் , தம்பி என்று அருகிலும் வைத்து கொள்ளவும் முடியாமல், பிரசவ வேதனையை அன்றே அனுபவித்து விட்டாய் !
நம் படிபிற்காய் நாம் விடுதியில் தங்க, நமக்குள் உண்டானது முதல் பிரிவு!
இப்படி நாட்கள் நகர..உன் திருமணத்திற்கான பேச்சு எழுந்தது!
காதலிப்பதை கூறினாய், ஏற்க மறுத்தனர் பெற்றோர்! வெளியில் சென்று திருமணம் முடித்தாய் நீ!
என்னிடம் காதல் பற்றி கூர, என்னை துணைக்கு அழைக்க எப்படி மறந்தாய் நீ !
நீ சொல்லவில்லை! நான் உதவவில்லை ! குற்ற உணர்ச்சி இன்றும் இருக்கிறது!
உனக்கு அழகான ஆண் பிள்ளை பிறக்க, உன்னை வந்து பார்க்காமல் மனது வலிக்கிறது, கௌரவம் தடுக்கிறது!
இன்றும் தம்பி என்று நீ வந்து நின்றால் பின்னாடியே வந்துவிடுவேன், ஆனால் நான் வந்து முதலில் பேச முடியவில்லை , படித்த அரக்கன் நான்.
உனக்கு இரண்டாவது பிள்ளையும் ஆண் குழந்தையாய் பிறந்து விட, தை மாமன் தேவை இல்லை என்று குறிப்பால் உணர்த்துகிறது விதி.
அறிவியலுக்கும் , whatsapp விற்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்! ஆம் உன் கை பேசி எண் என்னிடம் இருக்கிறது , என் மருமகன்களின் வளர்ச்சியையும் , அவர்களுது புண் சிரிப்பையும் உன் dp வழியே கண்டு ரசிக்கிறேன்!
நாட்கள் நீண்டு கொண்டே இருக்கிறது ..வயது முதிர்ந்து கொண்டே போகிறது, எனக்கு திருமண உறுதியாகி விட்டது! உன் வரவிற்காக காத்திருக்கிறேன் ! ஆனால் அழைக்கவில்லை! இப்பொழுதும் நான் சுயநலவாதி !
இப்படிக்கு உன் தமையன்!

எழுதியவர் : chandruleeds (2-Feb-15, 2:43 pm)
சேர்த்தது : chandruleeds
பார்வை : 76

மேலே