இந்தியாவின் சுவரொட்டி

இவர் வருகிறார்
சுவரொட்டி....
அவர் வருகிறார்
சுவரொட்டி....
இவர் தலைமையில்
கல்யாண சுவரொட்டி...
இந்தப் பட சுவரொட்டி...
"அந்த"ப் பட சுவரொட்டி...
பிரியா விடை சுவரொட்டி...
காதணி விழா சுவரொட்டி...
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி...
எல்லாம் ஒட்டிய பின்னும்
ஒட்டிய வயிறில்
ஒருக்களித்துக் கிடந்தான்
இந்தியாவின்
சுவரொட்டி...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (3-Feb-15, 10:49 am)
பார்வை : 182

மேலே