காதலுக்கு உயிர் கொடுத்தேன்

நான் என் மனதில் உன்னை வடித்த
சிலையை கூட வார்த்தைகளால்
உடைத்து எறிந்தாய்..

என் காதலுக்கு கல்லறை
எழுப்பி விட்டு.. நீ உன் கணவனுடன்
இல்லறத்தில் ஈடு பட்டாய்..

மறந்தே போய்.. நீ
மங்கலமாய் வாழ
மனதார வாழ்த்தி விட்டேன் அன்று..

மறுபடியும் என் முன்
வருகிறாய் கைம் பெண்ணாய்
மறுமணம் செய்து கொள் என்று..

மறுப்பு சொல்லவில்லை உள்ளம்
மன்னிக்கவே சொல்கிறது இதயம்
மறந்து மன்னித்து ஏற்று கொள்கிறேன்..

காரணம் காதல் சாக கூடாது
காலம் உள்ளவரை
காதல் உயிர் வாழவே....

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (3-Feb-15, 11:45 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 67

மேலே