ஆதலால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
ஓ மனிதனே மரமாய்
வெறுமனே நிற்காதே !
பயனுள்ள மரமாய்
வாழ் !
மண்புழு கூட வளம்
சேர்க்கிறது மண்ணிற்கு
மண்ணின் மைந்தன் என்னும்
மனிதன் மட்டுமே இயற்கை
அளித்த காடுகளை
விளை நிலங்களை அழித்து
மண் வளத்தை கெடுக்கிறான்
எண்ணற்ற உயிர்கள் வாழும்
இம்மண்ணில் நீயும் ஓர்
உயிரினம் மறந்துவிடாதே !
மனிதா இனிமேலாவது
மண் வளத்தை காப்போம் ...