நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்

காதலும் வீரமும் கண்களாய் போற்றி
காப்பியம் பல படைத்த -நம் தேசத்தை ..

தமிழன் இனத்தை தரணியில் போற்ற தமிழ்த்தாய்
தந்த வள்ளுவனைப்பெற்ற -நம் தேசத்தை ...

திருத்திய பண்பும் ,சீர்த்த நாகரிகமும்
பொருந்திய தூய்மொழியாம் நம்
செந்தமிழ் வளர்த்த -நம் தேசத்தை...

வந்தாரை வாழவைத்து உலகதற்கு
விருந்தோம்பல் தனை ஊட்டிய -நம் தேசத்தை ...

செக்கிழுத்து ,சிறைச்சாலை சென்று
செங்குருதியிட்டு காத்த -நம் தேசத்தை ...

அந்நியனைஅண்ணல் காந்தியின்
அஹிம்சை வழியில் விரட்டிய -நம் தேசத்தை ...

எண்ணிலடங்கா பெருமைதனைப் பெற்று
நம்மை பார்தனில் தலைநிமிரச் செய்த --நம்
பாரத தேசத்தை போற்றுவோம் !! வளர்ப்போம் !!

எழுதியவர் : sudarvizhi (3-Feb-15, 7:59 pm)
பார்வை : 255

மேலே