மாற்றிவிட்டேன்

பசிக்கும் வயிறு கேட்கும் உணவு
பொங்க வைத்து ஏற்கும் உறவு
புசிக்க பயிறு தந்தும் மனது
பிதற்றிக் கொண்டு தேடும் நாவு
ரசித்து உயிரு வளர்க்கும் மரபு
ரகசியம் அன்று இருக்கும் கனிவு
ருசிக்க கொன்று எடுக்கும் துணிவு
ரம்மியம் கண்டு உயரும் சாவு
கசிந்த உயிர்க்கு வாழும் தகுதி
கொடுக்க மறுத்து அடக்கும் செருக்கு
ஊசி கொடுத்து பெருக்கும் அளவு
ஊக்கம் மறந்து இழக்கும் உணர்வு
கூசி போனது எனக்கும் மனது
கூடாது கொன்று பொரிக்கும் அழுக்கு
பிசிதம் வெறுத்து வளர்க்கும் அறிவு
பிணத்தை புதைத்து வைக்கும் வழக்கு
விசிட்டம் கொண்டு மனமும் மாறு
விளங்கிட செய்து காப்போம் உலகு.

எழுதியவர் : துராந்திரன் குமரவேலு (3-Feb-15, 9:27 pm)
பார்வை : 78

மேலே