மண் பயனுற வேண்டும் நெஞ்சு பொறுக்குதிலையே
மண் பயனுற வேண்டும்
பாரதியின் வாக்குமூலம்
மக்கள் நீதிமன்றத்தால் புறக்கணிப்பு.
பார்! அதிவேகத்தில்
பார் அசுத்தப்படுவதைப்பார்.---
இந்த மண்ணை
மரம் காதலித்தது --- வேறு
வரன் தேடுகிறேன் என்று
மனிதன் வெட்டி சாய்த்தான்—
பருத்திச்செடியில் பஞ்சா ? நஞ்சா ?
பஞ்சமே இல்லை –
கன்றுக்குட்டிகளுக்கு கிடைக்கும் கஞ்சா..
விவசாயம் – இதற்கு மேல் ஒரு
செயற்கை சாயம்..
நிலத்தடி நீரை நேரே
பூச்சி கொல்லி புட்டிகளில் நிரப்பலாம் –
யூரியாக்கள் நிறுத்தி நிமிரச்செய்தும்
“சாய்த்த” நெற்பயிர்கள் .. நம்மை
“சாய்த்த” நெற்பயிர்கள்..
உரங்களுக்கிடையில் உளுந்துகள்
கரும்பிலும் காய் கனியிலும்
களங்கம் ---
கலப்படமாய் பொட்டாஷ் இன்றி
கலப்பைகள் உண்டோ ??
கழனியின் அகராதியிலிருந்து
“கம்ப்போஸ்ட்” சொல்
காணமல் போனதே !!
கடல் நீரிலிருந்து உப்பைப்பிரித்து
மழை நீர் தரும்
வானம் போதிக்கிறது
“மண் பயனுற வேண்டுமென்று “
செய்திகளை விட்டு
செய்தியாளர்களின் அலங்காரம்
மனதில் நிறுத்தும் மனிதா!
உனக்கு என்று புரியும்
உன் செயல்
மண் பயனுற வேண்டுமென்று ??