நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
வடக்கில் உயர் இமய மலை
மேற்கில் தார் என்ற பாலை
கிழக்கில் கங்கை சம வெளி
தெற்கில் செம்மொழி தமிழ்க் குமரி!
இடையினிலே வேற்றுமைகள் பலவுண்டு
இங்குள்ள ஒற்றுமைதான் எங்குண்டு
பழமையான பாரதமும் ஒளிர்கிறது
புதுமையான சாதனையில் வளர்கிறது!
விஞ்ஞானம் விவசாயம் தொழில் மேன்மை
மெஞ்ஞானம் மதநல்லிணக்கம் இறையாண்மை
சந்திராயணம் மங்கல்யான் சாதனைகள் எதிலும்
நிபுணத்துவம் சவால்களுக்கு தருகின்றன பதிலும்!
வரி ஏய்ப்பு தில்லுமுல்லு லஞ்சலாவண்யம்
அரிதின்றி ஆகிவரும் காம அட்டூழியம்
இவைகண்டும் காணாமல் போகும் போக்கு
மாறிடவே உயர்ந்திடலாம் போட்டுத் தாக்கு!
வலிமையான தேசமிது செழிக்க வழிகளுண்டு
எளிமையான முறைகள் செதுக்க மனமுமுண்டு
பழம்பெருமை பேசிடாமல் உயர்வை எண்ணி
தலைமுறைகள் வணங்கிடவே வேண்டும் புரட்சி!
-----
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி :
ச.கருணாநிதி, வயது: 53 ,
16,சுந்தர மேஸ்திரி வீதி, குயவர்பாளையம்,புதுச்சேரி
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 94433 03407

