வலிகள் மட்டுமே-சகி

என்னில் உண்டான
வலிகளுக்கு என்
கண்ணீர்த்துளிகள் மட்டுமே
உண்மையான ஆதரவு ....
தடுமாறிய பயணமே என்
வாழ்க்கையானது ஏனோ ?
கேள்விக்குறியான என் வாழ்க்கை
கேள்விக்குறியாகவே நிறைவடைகிறது....
நம்பிக்கையற்ற வார்த்தைகளும்
உண்மை இல்லா உறவுகள் ....
எத்தனை வரிகளில் வலிகளை
சொன்னாலும் உணராத உள்ளமே ....
என்னைபோலவே என் கவிதையும்
கண்ணீரில் மிதக்கிறது....