இனி வேண்டாம்

கொஞ்சியும் பார்த்தேன்
கெஞ்சியும் பார்த்தேன்,
கேட்டது கிடைக்கவில்லை
கிடைத்ததும் நிலைக்கவில்லை,
காண்பது ஒன்றே
கனவாகி போனால் ( போனதால் )
கண்களில் எந்நேரமும் கண்ணீர் மழை...
கனத்த மழையில், இதயம்
இடியும் மின்னலின் ஊடே
பயணிக்கிறது ' வாழ்க்கை ' எனும் ஓடம்...

- ஜனனி ராஜாராம் -

எழுதியவர் : ஜனனி ராஜாராம் (3-Feb-15, 8:09 pm)
Tanglish : ini ventaam
பார்வை : 147

மேலே