ஆதலினால் காதல் செய்வீர் – மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

அழகிய வெண்ணிலவை
ஆளுயர சுவற்றுக்குள் அடக்கமுடியுமா?
எதிர் வீட்டு சன்னல் எப்போது திறக்கும்?
இதயம் கேட்டது என்னிடம்....!
புதிர்போட்டு புலம்பாமல்
புரியும்படி சொல் என்றேன்.....!
எதிர் வீட்டு புதுமனை புகுவிழாவில்
புத்தம் புது ரோஜா
புதுவரவாய் மலரக்கண்டேன்
நானும் நீயும் ஒன்றாக இருக்க
நான் காணாத மலர்
உன் கண்ணில் மலர்ந்தது எப்படி?
பணத்திற்காக பகலிரவென்று பாரா
கணினித்திரையையே நோக்கும் நீ
மனத்தின் அருமை அறியாய்......!
காலமெல்லாம் காதலுக்காக ஏங்கும்
எனக்கு காதல்தானே தெரியும்.......!
இதயத்தின் முன் வெட்கித்தலை குனிந்தேன்
ஆதலால் காதல் செய்வீர்......!
கண்களால் அல்ல....! இதயத்தால்......!
****************************************************************************************************
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
பெயர் : பெ. கோகுலபாலன்
வயது : 54
முகவரி - #2, 30வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை - 61.
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 9444079620