ஆதலினால் காதல் செய்வீர்மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி

கற்பனைகள் பொய்யாக்கப்படட்டும்
கிறுக்கல்கள் கவிதையாதிருகட்டும்
கள்ளத்தனம் குடியேராதிருக்கட்டும்
கனவுகளுக்கும் ஓய்வு கிடைக்கட்டும்
கண்ணீர் பாதுகாக்கப்படட்டும்
அலைபேசிகள் அமைதியாயிருக்கட்டும்

”காதலிக்காதீர்”

தொண்டைக்கும் வயிற்றுக்குமிடையில்
துன்பங்கள் சேராதிருக்கடும்
இமைகளுக்கும் விழிகளுக்குமிடையில்
இன்னல்கள் கூடாதிருக்கட்டும்
தனிமைக்கும் கூட்டத்திற்கும் நடுவில்
தவிப்புகள் நிகழாதிருக்கடும்
இரவுக்கும் பகலுக்குமிடையில்
ஏக்கங்கள் தொடராதிருக்கட்டும்!

”காதலிக்காதீர்”

நிலவு நிம்மதியாயிருக்கட்டும்
நித்திரைக்கு சுதந்திரம் கிடைக்கடும்
நிகழ்காலம் நின்றுவிடாமலிருக்கட்டும்
நிம்மதி பறிபோகாமலிருக்கட்டும்!
உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும்
ஊர்வினை ஏற்படாதிருக்கட்டும்

”காதலிக்காதீர்”

பாவற்காய் கரும்பாகி!
பாம்பு கயிறாகி!
பச்சைத்தண்ணீர் பாலாகி!
பார்ப்பத்தெல்லாம் பரவசமாகி!
கிறுக்குப்பிடித்து! தனியே சிரித்து!
உருக்குழைந்து! ஒளிந்து அழுது!

இப்படி! இப்படியெல்லாம்
மேற்படி சொன்னவைகள்
நிகழவேண்டுமெனில்-
[ஆதலினால்] காதல் செய்வீர்,,

எழுதியவர் : அன்புடன் மலிக்கா (3-Feb-15, 10:34 pm)
பார்வை : 122

மேலே