என் ஆசைகள் எல்லாம் உன்னிடத்தில்
உன் கரங்களை இறுக
பற்றி அகத்தைத் திறந்து
கொட்டிய ஆசை எல்லாம்
இப்போது நான் உன்னில்
உறைவதற்கான காரணம்
இந்த நிமிடம் உடலுக்குள்
உயிர் செலுத்தப்பட்டு புதிய
பூமிக்குள் சென்றது போல
ஓர் உணர்வு இந்த உணர்வு
உன் அருகில் இருக்கும்
போது என்று இப்போது
தான் புரிந்து கொண்டேன்