வலி
வலியை கவிதையில் கூற ...
கூடி வருவதில்லை வார்த்தைகள் ..
வலியில் விலகும் மனிதர் போல் ..
விதியால் விலகுமோ வார்த்தைகள்!
வலிமையான வார்த்தையின் மௌனம்..
வலியில் நட்பின் பயணம் !
மொழிக்கு ஏற்பட்டதோ பஞ்சம் ?
மௌனத்தில் வார்த்தைகளின் தஞ்சம் !
வார்த்தைகளால் வருத்தத்தை கூறினேன்..
வார்த்தையில் ஆறுதலும் தேடினேன்.
வார்த்தையில்லா கவிதை இது ..
மௌனத்தில் மொழி வாடுது !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
