ஆடை

(திரு குர் ஆனில் சூரத்துல் பகரா 187 வது வசனம் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் கட்டுரை விதைத்த சிந்தனைகள் என் வரிகளில் )
வேதம் சொல்வதும் கூட ..
கணவனுக்கு மனைவி ஆடை..
மனைவிக்கு கணவன் ஆடை..
...
இல்லறம் நல்லறமாக..
ஒருவர்க் கொருவர்
குளிர் நீக்கி
வெயில் காத்து
குறை மறைத்து
நிற்க வேண்டும் என்பது மறந்து
அவசரமாய் ஆடை கிழித்து
அங்கம் காட்டி நிர்வாணமாய் திரிய
இல்லறம் இனிதாகுமோ?
விரும்பி தேர்ந்து எடுத்ததோ
தேர்ந்தெடுத்து கொடுக்கப் பட்டதோ
ஆடையை காத்திட
கிழிந்தாலும் தைத்து உடுத்திட..
அழுக்கு நீங்க துவைத்து கட்டிட..
ஆடைக்கும் மதிப்பு ..
அணிபவர்க்கும் மதிப்பு!
ஆடையை மாற்றிக் கொள்ளும்
ஆசையும் சிலருக்கு வருவதுண்டு..
ஆடையை எரிக்கும் சில பேர்களுமுண்டு..
ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் அன்றோ?
ஆடை சரியில்லை என்று தூக்கி போடாமல்
ஆடையை சரி செய்ய ..எல்லாம் சரியாகும்!

எழுதியவர் : கருணா (5-Feb-15, 12:46 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : adai
பார்வை : 172

மேலே