நெஞ்சு பொறுக்குதில்லையே -- மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
பால் சுரக்கும் மார்பில்தானே
செங்குருதி சுரக்குது
குழவியோ பசியாற துடிக்குது!
முதிா்ந்த பல கன்னிகளோ
மணமுடியாமல் இருக்குது
பணமுடிப்பு இல்லாமல் மணமுடிக்க மறுக்குது!
இன வெறியால் தமிழ் மனமே
குண்டு மழையில் தினம் நனையுது
ஐயோ தமிழ் இனமே அழியுது!
காம நோய்க்கு மருந்தில்லையே
பள்ளிக் குழந்தையையும் அது கடிக்குது
கருவிலிந்து வெளிவரவே பெண்சிசுவும் துடிதுடிக்குது!
வறுமை வலியில்தானே
வழியிலேயே குழவி குப்பையாய் கிடக்குது
காய்ந்தே உடல் இறந்தே மனதை முடக்குது!
நெஞ்சு பொறுக்குதில்லையே
மண்ணின் இக்கொடுமைகளைப் பாா்க்கையிலே
கண்களே வேண்டாமே பிறக்கையிலே
என புண்களாய் வருகிறது வாா்த்தையிலே..
----------------------------------------------------------------------------------------------
இக்கவிதை எனது சொந்த படைப்பு என உறுதியளிக்கிறேன்.