காலைச் சேவைகளில்

தினமும் பத்துப்
பதினைந்து முறையாவது
கிழித்தெறிவர் அன்றைய
தேதியின் தாள்களையே.

ஒரே நாளில் ஒரே ராசிக்கு
முரண்படும் பலன்களை
படித்தவுடன் சிரிக்கக்கூடும்
நாள்காட்டிகளிடம்.

நேற்றைய நிகழ்வை
விவரிக்கும் கலைவுகளை
அடுக்கிட மெனக்கெடல்
ஆகக்கலையிவருக்கு.

மறந்துவிடும் பொருளையும்
திறந்தாடும் அலமாரியையும்
கண்டதும் நமைக்கடிந்து
காத்திடும் காவலரிவர்.

பயன்படுத்தா எதையும்
பளிச் ஆக்குவதில்
பயன்படுத்தும் எவர்க்கும்
முதல் துணையிவர்.

உள்நுழைந்து இருக்கையில்
அமர்ந்ததும் சற்றே
உணரப்படும் பரவசத்தின்
அசல் பிரம்மாக்களிவர்.

முடியாத வறுமையிலும்
முதுமையிலும் தனிமையிலும்
புதுக்காலைச் சேவைகளில்
புத்துயிரூட்டும் புனிதர்களிவர்.

எழுதியவர் : சர் நா (5-Feb-15, 11:46 am)
பார்வை : 1279

மேலே