முடியாததை வெல்வோம் வா

மலையளவு தடையா?
தடுமாறாதே, கல்லும் தேயும் எறும்பிடம்
கற்றுக்கொள் அதனிடம்

வானமே எல்லையா?
மயங்காதே, ஓரடி உயரம் குன்றும்
முதலடி வைத்துப்பார்

கண்கட்டு வித்தையா?
கலங்காதே, கைமறைத்த வானமாகும்
புதுமையை புகுத்திப்பார்

காரணம் தேடாதே
புல்லும் குறுக்கே நிற்கும்
தடுக்கி நீ விழுவதற்கு

அஞ்சி நடக்காதே
நிலவும் ஒரு காரணமாகும்
நிழலாய் உன்னை துரத்துவதற்கு

சோம்பித் திரியாதே
சிலந்தியும் வலிமை பெறும்
சிறைபிடிக்க உன்னை சுற்றி வரும்

எழுந்து வா
புதுஉலகம் காண வா
சோதனைகளை கடந்து வா
சாதனைகளை காண வா
முயன்று வா
முடியாததை வெல்வோம் வா!!

எழுதியவர் : சு.முத்துக்குமார் (6-Feb-15, 8:37 am)
பார்வை : 136

மேலே