நிலம் நீர் காற்று
அந்த தனியார் மருத்துவமனையில்
நீண்டதொரு வரிசையில்
கால்கடுக்க காத்திருந்தது
காற்று ......?
இருமலுடன் இரத்தம் சிந்த
இருக்கை தேடியபோது
அங்கே அமர்ந்திருந்தது
தண்ணீர் .........?
தோல் எல்லாம் தடிப்புகளாய்
சொறிந்துகொண்டு அருவருப்பாய்
இருந்த அதன் அருகில் சாய்ந்திருந்தது
மண் ...........?
நிற்கவும் சக்தி அற்று
நிலைகுலைந்து மேனியில் வெடிப்புகளுடன்
தள்ளடிக்கொண்டிருந்த அதை கண்டு
முகம் சுழித்து சென்றான் மனிதன்
பின் குறிப்பு
கொண்டுவந்த பணம் போதவில்லையென
விரட்டப்பட்டன அங்கிருந்து
அரசு மருத்துவமனைக்கு