வேற்று கிரகத்திலிருந்து

நான் இந்த சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல!
பல கோடி ஆண்டுகள் எடுக்கும் என் கிரகத்தின் ஒளி
நீ வசிக்கும் பூமியை வந்தடைய!
இருப்பினும், அந்த ஒளியை விட பன்மடங்கு துரிதமாக
பாய்ந்து என்னை மூச்சு திணற வைத்து விட்டன
உன் ஓயா புலம்பல்களின் ஓலங்கள்,
ஆசைகளின் அதிரடிகள், சுயநலத்தின் பரிமாணங்கள்
இரக்கமில்லாமல் இதர உயிர்களை இம்சிப்பது, வதைப்பது
இயற்கைக்கு சொல்லொண்ணா உபாதைகளை உருவாக்குவது,
இத்யாதி, இத்யாதி!
இப்பொழுது புரிகிறது, உன்னை அடுத்த அண்டமெல்லாம்
ஏன் உயிர் ஏதுமில்லாமல் வரண்டு கிடக்கின்றது என்று!
நானும் முடிவு செய்து விட்டேன் -
இன்னும் வெகு தூரம் உன்னிடமிருந்து செல்ல!
அங்கேயாவது உன் எண்ண விஷங்களின் நெடி
நெருங்காமல் இருக்கட்டும்!

எழுதியவர் : tssoma எனும் சோமா (6-Feb-15, 4:39 pm)
பார்வை : 108

மேலே