தனியாக போக வேண்டும்
விடிவதற்கு
இன்னும் நேரம் இருக்கிறது..
இனி உறங்க ..வேண்டியதில்லை
கனவும் கலைந்து விட்டது..
இருள் ..இன்னும்
கொஞ்ச நேரத்திற்கு இருக்குமா..
கொஞ்சம் நடக்கலாம்..
பனியும் கூட..வருகிறது ..
துணையாகவோ..!
தனியாக..நான்..
நடக்க போகிறேன்..
என்னோடு நான் மட்டும் இருக்க வேண்டும்..
கொஞ்ச நேரமாவது ..
எண்ணங்கள்..
நினைவுகள்..
அச்சங்கள்..ஆசைகள்
எவன் எவனோ..
எவர் எவரோ..
எது எதுவோ..
எல்லாம் மனதில்
ஒன்று ஒன்றாக..
என்னோடு .கூட
வந்து கொண்டே இருக்கின்றன..
திரும்பி விட்டேன்..
தனியாக..
போக முடியவில்லை
தனியாக இருக்கவே
முடிவதில்லை !