பிரளயத்தின் வாசலில்

மூச்சிழுத்து..
மூச்சு விட்டு ..
காறி உமிழ்ந்து..
காட்டில் நடக்கிறேன்..

வெற்றிடத்தில் ..
வேகம் கூட்டி..
கடக்கிறேன்..
இச்சையின்றி..
இச்சையின்றி..இதோ
இந்த இருண்ட குகையில்
நுழைகிறேன்..
..
ஒரு துணையுமில்லை
அச்சமில்லை..
அச்சமில்லை..
கருப்பு உருவாய்
காகிதம் போல்
ஆகிறேன்..
பொங்கி வரும்
நெருப்பு குழம்பில்
நடக்கிறேன்..
குதித்து. குதித்து
எம்பி.. எம்பி..
ஆனந்தமாய் போகிறேன்..
இந்த குகை எங்கே போகிறது..
நீளம் தெரியவில்லை..
சோர்வும் தெரியவில்லை..
இதுதான் பிரபஞ்சமா..
இதுதான் பிரளயமா..
மூளை கேட்ட குரல்
கேட்டது..
எல்லாம் நின்றது!

எழுதியவர் : கருணா (6-Feb-15, 4:05 pm)
பார்வை : 193

மேலே