காதல்
நீளும் ஒரு உரையாடல் வேண்டாம்! - அதனிடையில்
குடி கொள்ளும் மௌனமும் வேண்டாம்!
பாதையில் நாம் கை கோர்த்து நடை பழக வேண்டாம்! -பிறர்
பார்த்திடுவார் என்ற மன பயமும் வேண்டாம்!
கவிழ்பதற்காய் நீ பாடும் கவிதையும் வேண்டாம்!
கடல் நீரில் உன்னோடு கால் நனைக்க வேண்டாம்!
கரை யமர்ந்து திங்கும் அந்த சுண்டலும் வேண்டாம்!
கடைசியில் நீ சொல்லும் சிறு பிரிவும் வேண்டாம்!
வருவேன் என்று எனக்காகா நீ காத்திருக்க வேண்டாம்!
வந்தபின் தாமதம் என்ற காதல் சினமும் வேண்டாம்!
கட்டி அணைத்து உறங்கும் மெத்தை தூக்கம் வேண்டாம்!
காமமது தூண்டும் உதட்டு முத்தம் வேண்டாம்!
காற்று கிழித்து செல்லும் வாகன சுற்றலும் வேண்டாம்!
ஊற்று நீரில் குளிக்க செல்லும் சுற்றுலாவும் வேண்டாம்!
சீண்டுவதற்காய் கூட்டி செல்லும் திரைப்படமும் வேண்டாம்!
நான் அழகென்று நீ வரையும் வரை படமும் வேண்டாம்!
நீ கால் ஊற்றி கழுவும் நீர் பிறப்பும்
நான் உள் வாங்கும் உன் சுவாசக்காற்றும்
உன் மடி சாய்ந்து கிடைக்கும் இறப்பும்
இந்த ஜென்மத்திற்கு போதுமடி!
என் ஆசை ஒவ்வொன்றாய்
வரும் பிறப்புகளில்
தீர்த்து கொள்வேன்! - ஆதலினால்
நீ பிறக்கும் ஊரினிலே
மீண்டும் நான்
பிறக்க வேண்டுகிறேன்
இறைவனைத்தான்!