நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுர வேண்டும் கவிதை போட்டி

பசிக்குது ரொம்ப பசிக்குது எனக்குப்
பல நாளா சரியா சாப்பாடு இல்ல
பிஞ்சி மனசு என்னலா யாருக்குத் தெரியும்?
பிடித்த கிழமையில பிடித்த சாமிக்கு
நாங்க விரதமிருக்காம பட்டினி கிடக்கோம்
கிடைச்சா ஒரு வேள குப்ப ஆப்பிள் தான்
தானத்துல செறந்தது அன்ன தானமுனுங்க
அது இப்போ யாருக்குத் தேவையினு தெரியல
ஆறுவேள உண்டவங்க மத்தியில நாங்க எங்க,
வீணாப் போயிட்டா குப்பையில கொட்டுராங்க
கொடுத்தா நாங்களாவது சாப்பிடுவோம்ல..
பணங்காசு கேக்கலைங்க மிஞ்சுரத போட்டாலே போதும்
ஊர ஏமாத்தி பொழப்பு நடத்தல நாங்க
நாய் மேலுள்ள மதிப்புல கொஞ்சமாவது காட்டுங்க
மனுச பிறவி ஐயா நாங்க, மறந்துட்டீங்களா?
ஏழ நாட்டுல மட்டோ பட்டினி கெடக்கல, தர்மபிரபு!
உங்க வீட்டுப் பக்கத்துளையும் பட்டினி கெடக்கோம்.
அழிச்சிறுவோமா இந்த உலகத்த, பாரதியே?
மனுசனா மதிக்காத ஆளுங்கள கண்டா நெஞ்சு பொறுக்கலையே ...