சென்னை சென்ட்ரல் - 555 - இறுதி பாகம்- சந்தோஷ்

ஆங்கில செய்தி சேனலை ஒளிபரப்புக்கொண்டிருக்கிறது RPF அலுவலகத்திலுள்ள தொலைக்காட்சி, அதன் எதிரில் அதிகாரிகள், அவர்களின் இருக்கைக்கு எதிரில் நிஷா உட்பட குழுவினர்.

சில நிமிடங்களுக்கு பிறகு,
தமிழக தலைமை செயலாளரிடமிருந்து அழைப்பு வருகிறது. பேசுகிறார் தமிழக காவல்துறை ஐ.ஜி ஆனந்த். ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சக அதிகாரிகள், மத்திய மந்திரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்துகின்றனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு,

“ நிஷா.........! தமிழ்நாட்டின் தலைமை செயலாளர்.. நீங்க வச்சிருக்கிற பாம்ஸ் டிஃபியூஸ் பண்ணினா.. உங்க கோரிக்கையை பரிசலிப்பதா சொல்லிட்டாங்க. நிச்சயம், எதாவது பண்ணுவதாகவும் சொல்லியிருக்காங்க. இப்போ அவங்க, கவலை எல்லாம் இங்க பாம் பிளாஸ்ட் ஆககூடாது. அதேபோலத்தான்,... மத்திய அரசும்.... சிகரெட் சேல்ஸ் இன்னிக்கு தற்காலிகமா நிறுத்த சொல்லி ஆர்டர் போட்டுட்டாங்களாம். உங்க டிமாண்ட்ஸ் பத்தி சீரியஸ் டிஸ்கெஷன்ல இருக்குன்னு சொல்றாங்க. முதல்ல பாம் வெடிக்காம இருக்கனும்ன்னு சொல்றாங்க...” உள்துறை உயர் அதிகாரி ஒருவர் நிஷாவிடம் தயங்கி தயங்கி பேசுகிறார்.

“ ஒகே சார். ரொம்ப தேங்க்ஸ். நாங்க கிளம்புறோம். உங்க கவர்மெண்ட்ஸ் மெல்லமா... பொறுமையா முடிவு பண்ணட்டும் . எவன் செத்தா என்ன..? எவன் என்ன ஆனா என்ன ? நல்லா இருக்கு சார் கவர்மெண்ட் லட்சணம் ! சரி சரி டைம் வேஸ்ட்... இப்போ 4 : 45 ஆச்சு. இன்னும் 15 நிமிஷம் தான்.... நாங்க சொன்ன இன்னோவா கார் வந்துச்சா ? நாங்க கிளம்பனும். எங்க உயிர் எங்களுக்கு முக்கியம் “

“ அப்போ பாம் ? “

“ ம்ம்ம் நாங்க ஸ்டேஷன் விட்டு வெளியே போனதும்.. எங்க இருக்குன்னு சொல்றோம். டிஃபியூஸ் பண்ணுங்க. . ஒரு சூட்கேஸ்குள்ள லேப்டாப்ல இருக்கும் . லேப்டாப்ல இருக்கும் பென் டிரைவ்ல ஒரு டைம்மிங் சாப்ட்வேர் ரன் ஆகிட்டு இருக்கும். அத எடுத்தாவே போதும் பாம் வெடிக்காது. ”

“மீதி பாம்ஸ்லாம்..? ”

“அது வெடிக்காது சார். ரிமோட் கண்ட்ரோல் பாம் அது. ரிமோட் என் ப்ரெண்ட் இளா-கிட்ட இருக்கு. நாங்க போக அனுமதிச்சா அதுவும் வெடிக்காது.”

உயர் அதிகாரிகளுக்கு இடையேயான தீவிர ஆலோசனைக்கு பிறகு, ..!

“நிஷா வேற வழியில்ல .. உங்கள நம்பி விடுறோம் “

“ அட... ரொம்ப ஈசியா சொல்றீங்க. எங்கள விட்டுட்டு பின்னாடியே ஃபாலோ பண்ணுவீங்க. இல்ல, கார்ல எதாவது வேலை பண்ணியிருப்பீங்க.. இந்தியன் கவர்மெண்ட் புலனாய்வு அறிவை ரொம்பவும் கேவலாம எடைபோடல சாரே.. நாங்களும் இந்திய குடிமகள்கள் மகன்கள் தான்..”

“இல்ல, அப்படி எதுவும் இல்ல... சரி நீங்க போகலாம். “

“ தேங்கஸ் எ லாட்... வெளியே போயி கார்ல ஏறினபிறகு பாம் எங்க இருக்குன்னு சொல்றோம். ம்ம் சரியா ? “

நிஷா உட்பட நால்வரும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தை விட்டு வெளியேறுகின்றனர். 10 வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருக்கு இரயிலில், யாருமில்லாத காலியான பெட்டியிலிருந்த இளவேந்தனுக்கும் நிஷா குறுஞ்செய்தி அனுப்பி வரவழைத்தாள்.

நேரம் இப்போது மாலை 4 : 50

இளவேந்தன் : “ நிஷா............மீடியாகிட்ட பேசலாம். வரசொல்லியிருந்தேன். ”

நிஷா : ” ம்ம்ம் ஒன்னும் நடக்கலையே........... இளா .......என்ன பேச...? “

இளவேந்தன் : “ ம்ம் ஒன்னும் நடக்கலைன்னு சொல்லிடுவோம் ஹா ஹா ஹா “

நிஷா.. “ ஓ.. அப்படி ...!!... “

ஊடக நண்பர்களுக்கு முன்...... சென்னை சென்ட்ரல் வாசலில் ..!

“ நண்பர்களே நான் நிஷா.. உங்கள் தோழி... உங்களைப்போலவே நானும் ரிப்போர்ட்டர் தான். நாங்க இப்போ ஒன்னும் சொல்லப்போவதில்லை . எங்க காரை பாலோ பண்ணிட்டு வாங்க. ஒரு சின்ன விஷயம் பெரிசா புரியும் . டைம் ஆச்சு.. தேங்கஸ் ஆல்.. “

இன்னோவா காரில் ஏறுகிறது ஐவர் குழு.

கார் சென்னை சென்ட்ரல் விட்டு நகர்கிறது. சாம்பல் புறா கார் செல்லும் திசையை நோக்குகிறது .

மாநில காவல்துறை ஐ.ஜி-யை போனில் அழைக்கிறாள் நிஷா... !

“ சார்........ குட் ஈவினிங்..! .. இவ்வளவு நேரம் இருந்தோம் .. ஒரு டீ கூட கொடுக்காம விட்டுட்டீங்களே.! அந்த ஆண்டி அடிச்ச அடியில எனக்கு வலி வேற..
சரி சார். பிளாட்பாரம் நம்பர் 7 , ... பார்சல் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிற ஒரு பெஞ்ச்க்கு கீழ T.W ந்னு ஒரு பெட்டி இருக்கும்.. அதுக்குள்ள ஒரு லேப்டாப் இருக்கும். ஒகேவா. நான் சொன்ன மாதிரி பாம் டிஃபியூஸ் பண்ணிடுங்க. T.W ன்னா... என்னான்னு யோசிக்க வேண்டாம். எங்க டீம் நேம் அது. அதாவது Team of Writers . சீ யூ அங்கிள் டா டா “


கார்........ சென்ட்ரல் எதிரே இருக்கும் மேம்பாலத்தில் செல்கிறது. காரின் பின்புறம் தொடர்கிறது ஊடக கார்கள் மற்றும் செயற்கைகோளுடன் இணைக்கும் டிவி நேரடி ஒளிபரப்பு வாகனங்கள்

-----------------

நேரம் மாலை 4 : 55
பிளாட்பாரம் நம்பர் 7

பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது. வெடிக்குண்டு நிபுணர்களால். பெட்டிக்குள் பல பேப்பர்கள் இருக்கின்றன. ஆனால் லேப்டாப் இல்லை.

நிஷாவின் செல்போனிற்கு நிஷாவை தொடர்புகொள்கிறார் ஐ.ஜி ஆனந்த்.!

“ நிஷா அதுல லேப்டாப் இல்ல..... “

காரில் சென்றுக்கொண்டிருக்கும் நிஷா.. “ என்னது ? லேப்டாப் இல்லையா..? இளா, அதுல லேப்டாப் இல்லையாம் டா.. இருங்க சார், கேட்டுட்டு சொல்றேன்.? “

“ யூ இடியட்... டைம் ஆகுது... passengers உயிர் பிரச்சினை...”

“ உங்களுக்கு இருக்கிற அக்கறை கவர்மெண்டுக்கு இல்லையே சார். நாங்க என்ன பண்ண..? அந்த பேப்பர்ஸ்லாம் சாதாரண பேப்பர்ஸ் இல்ல சார் நாங்க 5 பேரும் கஷ்டப்பட்டு எழுதின கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். அரசும் அரசு அதிகாரிகளும் எப்படி இருக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறோம். வெப்சைட்ல போஸ்ட் பண்ணினா படிக்க ஆள் இல்ல, பாயிண்ட்ஸும் போடமாட்டிங்கிறாங்க.. நீங்களாவது படிங்களேன் ஐ.ஜி அங்கிள். முடிஞ்சா, உங்க செலவுல புத்தகமா போடுங்க ஒகே வா”

“ நிஷா.. விளையாடுற நேரமா இது . ப்ளீஸ் பாம்ஸ் உண்மையா இருக்கா இல்லையா.?. இல்ல வெறும் fake play வா ? “ ஆனந்த ஐ.ஜி அதீத பதட்டத்துடன்.

“ அங்கிள் சார். இப்போ ரயில்வே ஸ்டேஷன்ல டிரெயின் புறப்படும் பற்றிய அறிவிப்பு வரும்..அந்த டிரெயின்ல S7 கோச்ல வச்சிருக்கோம். போய் எடுங்க .. ஹரி அப் ஹரி அப் “

“ யூ......யூ................... “

“ அய்யோ பாவம் ஐ.ஜி மெர்சலாகிட்டாரே..! . .அடிக்கடி கால் பண்ணாதீங்க அங்கிள். என் பாய் பிரெண்ட் கோவிச்சுப்பான்............ என்னோடு பாய் ப்ரெண்ட் கார்த்திக்ன்னு சொன்னது பொய். .. இளா, இளவேந்தன். என் காதலனை கூடஒழங்கா கண்டுபிடிக்கல உங்க போலீஸ். ஹி ஹி ஹி.... “ நிஷாவின் நக்கல் எல்லை மீறுகிறது,


சினம் கொண்ட ஐ.ஜி

“ அடச்சீ வை . “

-------------------------
நேரம் மாலை 4 : 56

இரயில் நிலைய ஒலிப்பெருக்கியில் “ பயணிகளின் கவனத்திற்கு...... சென்னையிலிருந்து, ஈரோடு , போத்தனூர் வழியாக மங்களூர் வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் , பிளாட்பாரம் எண் மூன்றிலிருந்து புறப்படும் நேரமிது. ”

“ ஒ காட் .. மங்களூர் எக்ஸ்பிரஸ்.. கார்டுக்கு இன்பார்ம் பண்ணுங்க .. “

“ ஹரி அப் .. ஹரி அப்..... “

“ கமான்.. இன்னும் 4 நிமிஷம் தான் இருக்கு.......”

அதிரடிப்படை........, RPF என அனைத்தும் படையும் பரபரப்படைகின்றன.

மங்களூர் எக்ஸ்பிரஸ் புறப்படவில்லை. தீவிர சோதனை நிகழ்த்தப்பட்டது.. S7 கோச்சில் ஒரு லேப்டாப் பேக் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே ஒரு லேப்டாப்

நேரம் இப்போது மாலை 4 : 58

நிஷாவிற்கு ஐ.ஜியிடமிருந்து மீண்டும் அழைப்பு வருகிறது.

“ நிஷா.. லேப்டாப் இருக்கு..அதுல வெடிக்குண்டு கனெக்ட் பண்ணலையே..... பென் டிரைவ் இருக்கு. லேப்டாப்க்கு உள்ள எதாவது இருக்கா ? “ ஐ.ஜி ஆனந்த.

“ யா அங்கிள் ! மறந்துட்டோம். வெடிக்குண்டு வைக்க மறந்துட்டோம். பட் பெண் டிரைவ் இருக்குல்ல.......அதுல லேட்டஸ்ட் சாங்க்ஸ் இருக்கு.. கேட்டு ரசிங்க.. ஹா ஹா ஹா அப்புறம் நிஜமான வெடிக்குண்டும் இருக்கு.... நடைமேடை எண் 1 ல இரண்டு பாம் இருக்கு. நடைமேடை எண் 5 ல ஒரு பாம் இருக்கு.. அத கண்டுப்பிடிங்க. எல்லாமே ஆர்.டி.எக்ஸ் .என் ப்ரெண்ட் கிறிஸ்டோபர் பண்ணினது. செக் பண்ணி பாருங்க . ஒகே ஒகே நாங்க இப்போ ஹை-கோர்ட்டுக்கு போயிட்டு இருக்கோம். சரண்டர் ஆகிடுவோம். நாங்க வெடிக்க வச்ச இரண்டு வெடிக்குண்டுக்கும். 5 மணி நேரமா நாங்க விளையாடிய விளையாட்டுக்கும் பொறுப்பு ஏத்துக்கிறோம் அங்கிள். ஆனா அங்கிள், நாளைக்கு உங்க பதவி காலி...............ஐ நோ... ஐ நோ..... ஐ நோ.. ரகுவரன் ஸ்டைலில சொல்றேன் பாருங்க .. ஐ நோ .. ஐ நோ ஐ நோ.... ஒ.கே. டாடா அங்கிள் சீ யூ .....டேக் கேர்........ “

சாம்பல் புறா... இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மரக்கிளையில் அமர்ந்து ஐவர் குழுவின் செயல்பாட்டை கவனிக்கிறது. சற்று நேரத்திற்கு பின்பு ஐவர் குழு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

அன்றிரவு புதிய கலைமுறையின் செய்தியில்..............!

ஐந்து பேர் கொண்ட TW குழு, இன்று நடத்திய நாடகத்தில் சென்னை மட்டுமல்லாது , இந்திய தேசத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.

இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை. ஐவர் குழுவினர் நடத்திய மிரட்டல் நாடகத்தினால் பல உண்மை நிலவரங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.
இந்த ஐந்து பேரும் மிரட்டல் நாடகத்தை நடத்தியமைக்கும், இரு வெடிக்குண்டுகளை வெடித்து நாட்டின் பொது அமைதியை 5 மணி நேரம் கெடுத்தமைக்கும் தார்மீக பொறுப்பேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நாடகத்திற்கு பிறகு ஐவர் குழு, நமது சிறப்பு நிருபரிடம் அளித்த அறிக்கையின் முக்கிய அம்சம் . இதோ...........!

1) மக்களாட்சி என்று கொண்டாடப்படும் நம் ஜனநாயகத்தில் , மக்களுக்கான சேவைகள் யாவும் கேள்விகுறியாகவும் ஏளனமாகவும் இருக்கிறது. அதிபயங்கர மிரட்டலின் போதும் அரசு, தங்களது முட்டாள்தனமான , மக்கள் விரோத கொள்கைகளை கைவிட மறுக்கிறது. இதன் அடிப்படையில் மத்திய , மாநில அரசுகள் என்பது சாமானிய மக்களுக்கு அல்ல. கொழுத்து செரித்துக்கொண்டிருக்கும் , செல்வந்தர்களுக்கு அரசு அடிப்பணிந்து நடக்கிறது என்பது உறுதியாகிறது.

2) மக்களுக்கு, போதை பொருட்களை விற்பனை செய்யும் அரசு.. மக்களை பாதுகாக்க, உயிர்காக்கும் மருத்துவ சேவையில் அதிகளவில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் புகைப்பிடிக்காதீர். மது அருந்தாதீர் என்று கண் துடைப்பு விளம்பரங்களை செய்து அரசும், ஆட்சியாளர்களும் மக்கள் துரோக நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய , கேள்வி கேட்க வேண்டிய குடியரசுத்தலைவரோ வெறும் பொம்மையாகவும்.. தேர்தல் ஆணையமோ வெறும்ம் அரசு இயக்கும் ரோபா வாகவும் இருக்கிறது,

3) இந்த மிரட்டல நாடகத்தின் முக்கிய அம்சமே... அரசு மற்றும் இரயில்வே துறை பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டவே.. நமது செய்தியாளர் நிஷா, அவரின் காதலன் அட்வகேட் இளவேந்தன், மருத்துவர் கீதா, முனைவர் கிறிஸ்டோபர், ஐ.டி கம்பெனி நிர்வாக இயக்குநர் கார்த்திக் ஆகிய ஐவரும் மக்கள் அதிகளவில் கூடும் சென்னை சென்ட்ரலில் பாதுகாப்பு சோதனைகளை கடந்து மிகவும் எளிதாக இரயில்நிலையத்திற்குள் நுழைந்திருக்கினறனர்.
------- 10 வது நடைமேடைக்கு வரும் நுழைவாயிலில் பயணிகளை சரியாக சோதிப்பதில்லை. அதன் வழியே இளவேந்தன் மிக எளிதாக நுழைந்து இருக்கிறார்.
------- இரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறும் 2ம் 3ம் நடைமேடைக்கு எதிரே இருக்கும் நுழைவாயிலில் எவ்வித பாதுகாப்பு சோதனையும் நடைப்பெறுவதில்லை. இவ்வழியே தான் கீதா மற்றும் கிறிஸ்டோபர் துப்பாக்கி மற்றும் வெடிக்குண்டுகளுடன் உள்நுழைந்து உள்ளனர்.

------- சென்னை சென்ட்ரலுக்கு வரும் இரயில்களில் பெரும்பாலானவை, புறநகர் இரயில்நிலையமான பெரம்பூர் இரயில் நிலையத்தில் இருநிமிடம் நின்று வருகின்றன. அங்கு சோதனைகள் ஏதும் அறவே இல்லை அங்கு எவரும் எளிதாக இரயில் ஏறி, சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வந்து இறங்கலாம். இதன்படியே ’கார்த்திக்’ சக்தி வாய்ந்த இரு வெடிக்குண்டுகளை இரயில் நிலையத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

ஆக,, தீவிரவாதிகளே அல்லாத இவர்களாலே மிகவும் எளிதாக வெடிக்குண்டுகளை ,துப்பாக்கிகளை கொண்டு மிக எளிதாக உலாவு முடிகிறது என்றால், இவர்களை கடும் சோதனைக்கு உட்படுத்த முடியாத , கையலாகாத நிலை என்றால்.. அதிபயங்கர தீவிரவாதிகள், இரயில் நிலையங்களில் நுழைய அதிபயங்கர திட்டம் தீட்டவே தேவையில்லைதானே.. இந்த அவலட்சணத்தை இரயில்வே துறைக்கும், அரசுக்கும் எடுத்துரைக்கவே இவ்வாறான நாடகத்தை நடத்தி உள்ளது சமூக நல அக்கறையுள்ள இளம்படையான ஐவர் குழு.

வெடிகுண்டுகளை வைத்த பிறகு, மிகவும் துரிதமாக செயல்படுவதில் காட்டும் அக்கறையை ,வெடிக்குண்டுகளை பறிமுதல் செய்வதிலும், வெடிக்குண்டுகளை சோதனை செய்வதிலும் இந்திய அரசும், உளவுத்துறையும் இன்னும் அதீத சிரத்தை எடுத்து செயல்பட வேண்டும் என்று இந்த நாடகத்தின் மூலம் உணர முடிகிறது.

இவர்கள் ஐவருக்கும் ஒரே ஒரு சம்மந்தம் தான். இவர்கள் ஐவரும் எழுத்தாளர்கள். ...!
வெவ்வேறு துறையில் இயங்கிக்கொண்டிருந்தாலும்.. சமூகத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டுமென்ற வெறியுடைய எழுத்தாளர்கள்...!



5 மணி நேர நாடகம்.. 5 மணிக்கு முடிவுற்ற நாடகம். நாடகம் நடத்திய 5 பேர்.. மற்றும், நாடகம் நிகழ்த்தப்பட்ட இடம் சென்னை சென்ட்ரல் .

குழந்தை தனமாக இருந்தாலும் .. இந்த மிரட்டல் நாடகம் பல விடயங்களை யோசிக்க வைக்கின்றன. இந்த நாடகத்தினால் அரசுகளின் லட்சணத்தை மக்களுக்கு எடுத்துரைத்த விதம்.சர்ச்சையை ஏற்படுத்தினாலும் பாராட்டுதற்குரியது.

இவர்கள் நடத்திய நாடகத்தினால் மட்டுமே மத்திய மாநில அரசுகளின் பாதுகாப்பு முறைகள் பற்றிய லட்சணங்கள் வெளிக்கொணரமுடிந்தது. ஐ.ஜி உடபட காவல்துறையினரின் முட்டாளதனமான செயல்பாட்டினை காணமுடிந்தது. கம்பீரமாக இருக்க வேண்டிய காவல்துறை, மிகவும் சர்வ சாதாரணமாக பணிய நேரிட்டது தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கசப்புணர்வுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஊடகத்துறையின் சார்பாகவும் , புதிய கலைமுறை செய்தி சேனலின் சார்பாகவும், எமது செய்தியாளராக பணிப்புரிந்த நிஷா உட்பட ஐவர் குழுவை பாராட்டுகிறோம்.

வணக்கம்........!

-----------------------------------------------------------------------------------------------------------------------




அடுத்த நாள் விடியற்காலை,

சாம்பல்புறா... பனிப்போர்த்திய வானில் சிறகடித்து சென்னை சென் ட்ரல் சிவப்புக்கோட்டையின் நுழைவாயிலை ஆர்பாட்டமாக பார்க்கிறது.

அங்கு ..................................

ஐவர் குழுவை இயக்கிய ஒர் எழுத்தாளன் ... மனித வெடிக்குண்டாக செயல்பட்டு.. அரசிற்கு ஏதோ ஒன்றினை புரியவைக்க , கோவை எக்ஸ்பிரஸ் இரயிலை பிடிக்க விரைவாக ஒடோடி கொண்டிருக்கிறார்,

யார் அவர் ?


-------------
- இரா. சந்தோஷ் குமார்.



(முற்றும் )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (6-Feb-15, 10:01 pm)
பார்வை : 220

மேலே