சானல்

மாலை ஆறிலிருந்து எட்டு மணி வரை எங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட் கண்ட்ரோல் என் கணவர் கைக்கும் மகளின் கைக்குமாக மாறி மாறி படாத பாடுபடும். அந்த நேரம் நான் வீட்டின் உள்ளும் வெளியிலும் நடந்து டிவி பார்க்காமல் வசனங்களை மாத்திரம் காதில் வாங்கிக் கொண்டு சின்னச் சின்ன வேலைகளை செய்து கொண்டிருப்பேன். “நறுக் நறுக்” என சானல் மாற்றுவதால் காதில் விழும் குளறுபடி வசனங்கள் இதோ:
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான்முகனே... படைக்கும் தொழிலை மேற்கொண்டிருக்கும் நீர் பிரணவத்தின் பொருள் கூறும்?....

ஹக்கீஸ் வொண்டர் பேட்.... ஹக்கீஸ் ஹக்கீஸ் ஹக்கீஸ் வொண்டர் பேட்....

................................................................................................................................................................................................

அரசுத் தரப்பில் ஆவணங்கள் இல்லாமல் சொத்து மதிப்பை எவ்வாறு கணக்கிட்டீர்கள் என்ற நீதிபதியை........................

நல்லாக் கழுவி, பொடியா நறுக்கி, வாணலியில் சிவக்க வறுக்கணும்...

................................................................................................................................................................................................

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் ஐந்து புள்ளிகள் உயர்ந்ததால்.....

ஏங்க, நீங்க அப்பாவாகப் போறீங்க.....

................................................................................................................................................................................................

பயிரில் வெட்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டால் ஒரு மில்லி பாக்டம்பாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க...............

தலைமுடி உதிர்வது நின்று விடும்; தன்னம்பிக்கை பெருகும்.

................................................................................................................................................................................................

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கே லேசான மழையுடன்............

வாயுத் தொல்லை உண்டாகலாம். மலச்சிக்கலுக்கும் எங்கள் லேகியம் ஏற்றது...

................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (6-Feb-15, 6:19 pm)
பார்வை : 168

மேலே