வரலாற்று யாத்திரைகள் 05 - ஒரு பக்க கதைகள் - வே புனிதா வேளாங்கண்ணி

பரத நாட்டின் அரசவைக் கூட்டம் அன்று கோலாகலமாக துவங்கியது...

ராஜமாதா ப்ரிய தர்ஷினியம்மாவின் வருகைக்காக முழு அவையுமே
எதிர்பார்ப்போடு காத்திருந்தது...

அவரது கொள்ளுப்பேரன்களின் பிறந்த நாள் விழாவிற்கு அவரது அழைப்பு கிடைத்ததுமே,
அனைத்து நாட்டு மன்னர்களும் உடனடியாக கிளம்பி, பரத நாட்டை அடைந்து அன்றைய கூட்டத்தில்
கூடியிருந்தனர்.

சக்கரவர்த்தி சஞ்சய் குமாரனும், படைத்தளபதி ராஜீவ் குமாரனும் அந்த விழாவிற்கு வேண்டிய
எல்லா ஏற்பாடுகளையும் செய்ததோடு மட்டுமில்லாமல், வரும் மன்னர்களை எல்லாம்
அரண்மனை வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

வந்த மன்னர்களிலேயே முக்கியமானவர் சிங்க நாட்டின் அரசர் பிரபாகவேல‌ன் அவர்கள்,
முதல் வரிசையில் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். அவரிடம் இளவரசனும், இளவரசியும்
பலந்த சிரிப்போடு அளவளாவிக்கொண்டிருந்ததை அங்கு வந்திருந்த மன்னர் கூட்டமே ரசித்துக் கொண்டிருந்தது.

"ராஜ மாதா வருகிறார் வருகிறார் வருகிறார்" என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து...

ப்ரிய தர்ஷினியம்மாவின் வருகைக்குப் பின் மிகச் சிறப்பாக கொள்ளுப்பேரன்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது...

ராஜ மாதாவின் இரு பக்கமும் அவரை முப்பது வருடங்களுக்கு முன்பு கொல்ல திட்டம் தீட்டி,
பின் மனம் திருந்திய அவரது பாதுகாவலர்கள் சந்திரவளவனும், சூரியவளவனும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தனர்...............

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (6-Feb-15, 2:17 pm)
பார்வை : 220

மேலே