வளர்த்த கடா
ஏ உடலே! என் உடலே!
ஏன் இந்த வீம்பு, ரகளை எல்லாம்!
உனக்கு, காண நான் காட்டாததுவா?
கேட்க நான் இசைப்பிக்காததுவா?
சுவைத்து ரசிக்க நான் கொடுக்காததுவா?
செல்லம் கொடுத்து கெடுத்து விட்டோனோ?!
இப்போது வளர்ந்து விட்டாய்,
வாலிபனாகி விட்டாய்!
ஏதும் சொன்னால் "நோயா, தளர்வா,
சான்றோர் சொல்படி நடப்பதா, நானா? !
வயோதிகமா, எனக்கா?
அஹ்ஹஹ்ஹா!"
என்று கொக்கரிக்கின்றாய்!
காண கலர் கலராய் தேடுகிறாய்!
சுவைக்க விதவிதமாய் நாடுகிறாய்!
தோழர், தோழியர் உறவுகளில் குதூகலிக்கின்றாய்!
பந்தா, பணம் என்று உன்மத்தனாகத் திரிகிறாய்!
உன்னுள்ளே உறையும் என்னை உன்னினாயில்லை!
என்னையும், உன்னையும் இயக்கும் இறையை எண்ணினாயில்லை!
என் செய்வேன்? வளர்த்த கடா
மார்பில் பாயும்தானே!