அந்த நாள் இனிவருமா

நாள் இனி வருமா ...!
--------------------------
மாங்காய் திருட ஆசை வந்து
மரமேறி சென்ற போது
கிளை ஒடிந்து கீழே விழுந்து
கை ஒடிந்து நின்றபோது
கண்ணீர் வராமல் கட்டுபடுத்திய
இளம் வீரம் இருந்ததெல்லாம்
அந்த காலம் !
பத்தாம் வகுப்பில் பத்மாவின்
பதார்த பாக்சை திருடி சென்று
தயிர் சாதத்தை உண்டுவிட்டு
அவள் பாத்திரம் பார்த்து
பரிதாபமாய் நின்ற போது
கண்சிமிட்டி உதைபேன் என
கட்டை விரல் காட்டி மிரட்டிய
காளையாய் இருந்ததும்
அந்த காலம் !
கைலியை கட்டி கொண்டு
காலார நடந்து சென்று
நாய்க்கர் கடையில் நாலனாவுக்கு பானிடீயும்
நண்பனிடம் இரவல் பீடியும்
இழுத்துவிட்டு இன்பம் கண்டதும்
அந்த காலம் !
குண்டு நண்பனை குந்த வைத்து
குதிங்கால் வலிக்க மிதிவண்டி மிதித்து
இரவு காட்சி பார்த்து விட்டு
இந்த பிள்ளையா பால் குடித்தது
என எண்ணும்படி
வீட்டில் வந்து தூங்கிய
திருட்டு தனம் இருந்ததெல்லாம்
அந்த காலம்
இன்னுமொறு முறை
இப்படியெல்லாம் நானிருக்க
இப்போது ஏங்குவதுதான்
என்னுடைய இந்த காலம் !

எழுதியவர் : (7-Feb-15, 2:34 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 59

மேலே