நீ என் உயிரம்மா ……………
ஒவ்வொரு நெல்லெடுத்து
ஒன்னு ஒன்னா சேர்த்தெடுத்து
நோகாம நெடுமரமா
வளர்ந்திருக்கும்
செல்லம்மா
என் செல்லம்மா
ஒத்தையடி பாதையா
ஒவ்வொரு பக்கமா
நாலாப்புறமா
சுத்தி சுத்தி இருக்கும்
கண்ணம்மா
என் கண்ணம்மா
பாதி வயலில
மீதி வெயில
களைஞ்ச களையில
கஞ்சி கொண்டு வரும்
பொன்னம்மா
என் பொன்னம்மா
சோத்து நடுவில
கருவாட்டு குழம்புல
பட்டு இடுப்புல
பக்குவமா சமைச்சி வரும்
உயிரம்மா
நீ என் உயிரம்மா ……………………!