பெண்ணே உன் அழகு
வான் நிலவும் தரையிங்கி
தான் இன்று
வந்ததே
தனைப் பற்றிக் கவி பாட
எனைப் பார்த்துச்
சொன்னதே
வார்த்தையின்றி நான் நின்றேன்
வான் நிலவின் அழகினிலே
மூர்ச்சையாகி நான் நின்றேன்
பெண் அவளின் அழகினிலே
அழகெல்லாம் சேர்த்து வடித்த
சிலை என்று
சொல்வேனா
இவையனைத்தும் பிரம்மன்
அவன் கலை என்று
சொல்வேனா
கருங்கூந்தல் தான் கண்டு
மயில் தோகை விரிக்குமே
பிறை நெற்றி தான் கண்டு
செங்-கமலமும் நாணுமே
பாவை உன் விழிகளோ
பால் குவளை திராட்சையடி
கோதை உன் இதழ்களோ
பழக் கோவையின் நிறமடி
முத்தென வெண் பற்கள்
உன் சொத்தாகும்
இதழ் சிந்திடும் புன்னகையோ
எனைப் பித்தாக்கும்
கவிதையும் அழகாகும் உன்
அழகை அது பாடினால்
அதிசயங்கள் பொய்யாகும்
பெண்ணே உன் அழகினால்.