காதல் வெண்பா பூக்கிறது புன்னகை 5

காதல் அந்தாதியின் 5 ஆம் பா . சற்று நீளமானது சொற்களும் அதிகம்
நாற்சீர் அளவடியும் ஈற்றடி முச்சீரும் கொண்டு நேரிசை அல்லது இன்னிசை
வெண்பாவாக மாற்றியமைக்க வேண்டும் . முயவோம்


பூங்குயில் புரியும் புன்னகை
-------------------விரியும் புதுக்கவிதைப் புத்தகம்
மாங்கனிக் கன்னம் மச்சம்
------------------கோலோச்சும் மன்மத அரசாங்கம்
தேனிதழ்கள் இரண்டும் இன்பத்
------------------தேனாறு பாயும் பிரவாகம்
நானிழந்து நின்றேன் என்னை
------------------இவள் கயல் விழியோரம் !
========================================================================
சொன்ன வெண்பா வடிவம் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பூங்குயில் நீபுரியும் புன்னகைப் புத்தகமாம்
மாங்கனிக்கன் னம்மச்சம் கோலோச்சும் பேரரசாம்
தேனிதழோ இன்பப் பிரவாகம் ---உன்விழியோ
நானென்னை இழக்கு மிடம்.
========================================================================
பிழை சுட்டுதல் நற் கவிஞருக்கு அழகன்றோ ?
தளை தட்டுகிறதா ? தட்டிப் பாருங்கள்
தட்டினால் சுட்டிக் காட்டுங்கள்
-----------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Feb-15, 5:17 pm)
பார்வை : 104

மேலே