நெஞ்சம் பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
கருவறை வரை கம்பியை சொருகி
ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலத்தில்
ஒரு பெண்ணின் உயிர் பிரிந்தது
நம் பாரத கண்ணியம் சிதைந்தது
மனித உயிர் ஒவ்வொரு முறை
அழியும் போதும் நமக்குள்ளே
புது போராட்ட உணர்வு பிறக்கும்
அது ஒரு புது பட வெளியீட்டில் மறக்கும்
எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்
இறந்த பெண்ணையும்
கொன்ற ஐந்து மிருகங்களையும்
பாவம் செய்யாத பெண்ணுக்கு
உடனே தண்டனை
பாவம் செய்த மிருகங்களுக்கு
கருணை மனு,உச்ச நீதிமன்றம்,
உயர் நீதிமன்றம்,வழக்கு நிலுவை
வாழ்க பாரத சட்ட திட்டம்
நயவஞ்சக அரசியல்
பாதுகாப்பு இல்லாத பாரதம்
நினைத்தாலே நெஞ்சம் பொறுக்குதில்லையே