அவள் அழகி

அவள் அசைந்து வீதியிலே போகையிலே!
மனம் பிசைந்து கிடுக்குதிந்த ஆணுலகம்!
அவள் படைத்த பெருமையிலே ஆண்டவனும்
தலைக்கணம் தலை ஏறி திரிகின்றான்!

அவள் விழியசைந்தால் விழுந்துவிடும்
தேவர் வாழும் விண்ணுலகம்!
அவள் கை வீசி நடந்துவிட்டால்
தன் வாய் திறக்கும் மண்ணுலகம்!

அவள் சிரிப்பொன்று சிரித்தாலே
சூரியனும் சினம் தணிப்பான்!
அவள் தாவணியின் உறசலிலே
ஆடிவிடும் அவணியும்தான்!

அவள் தன் எச்சில் முழிந்து விட்டால்
எரிமலையும் குளிர்ந்துவிடும்!
அவள் கால் அது நனைத்து விட்டால்
கடல் நீரும் கனி சுவையடையும்!

கால் விரல் பட்ட வழி மண்ணும்
பூவாக பிறப்பெடுக்கும்!
அவள் குளித்த நீர் சேர்ந்து - நாளை
பூமியுந்தான் கூத்தடிக்கும்!

அவள் கை வளையல் ஓசையிலே
குயிலும் தன் இசை மறக்கும்!
அவள் கோயிலுக்கு சென்றாலோ
சிலைகளுக்கும் உயிர் பிறக்கும்!

எதிரே அவள் வந்து விட்டால்
இதயமதும் தீ பிடிக்கும்!
அவள் மூச்சு காற்று பட்டால்
கருங்கல்லும் கவி படைக்கும்!

எழுதியவர் : சங்கீதா பிரியா (7-Feb-15, 5:07 pm)
Tanglish : aval azhagi
பார்வை : 634

மேலே