உனக்காக வாழும் இதயம் 555

பிரியமானவளே...
முதல் சந்திப்பில் பேருந்தில்
இடம் மாறியது...
இருக்கைகள் மட்டுமல்ல
நாம் இதயங்களும்தான்...
நாம் ஒருவரை ஒருவர்
நேசித்ததைவிட...
நாம் நேசித்தும் இதுவரை
நாம் சந்திக்காமலே...
காதலென்னும் நம் பயணம்
சென்றுவிட்டது வெகுதூரம்...
வாழ்க்கை தேடலில்
நான் தொலைத்த இன்பத்தை...
உன்னால் மட்டுமே திருப்பி
கொடுக்க முடியும்...
உன்னை பார்க்காவிட்டாலும்
உனக்காகவே வாழ்கிறேன்...
உன்னை நினைத்து...
என்றேனும் ஒருநாள்
உன்னை சந்திக்கும்
இன்பம் கிடைக்குமென்று...
அன்று கிடைக்கும் நான்
தொலைத்த இன்பங்கள் அனைத்தும்...
உன்னிடம் மட்டுமே
உன் அன்பில்.....