febuary பதின்னான்காம் பக்கம் புரட்டிப் பார்க்க

#)#)@@@#))((@))#((@#@))#(#)@@)#

கண்ணிமைகள் ரெண்டும் பாட்டிசைத்து
கலியுகம் முழுதும் மந்திரம் ஓதி
கதிரவனை பொறை கொண்டு மறைத்து

@@@மேகங்களை கருமையாக மாற்றி
உறங்கிக் கொண்டு இருக்கும் உறவுகளின்
முடிச்சை பெருமூச்சால் வீழ்த்தி
மேதையான ஒரு உள்ளம் போதையாக அலைகிறது

@@@பாதங்கள் பண் இசைத்து
ஆதிக்கமாய் ஆவல் கொண்டு
சரீரம் முழுதும் ஆரங்கள் கலைத்து
உபகாரமாய் உணர்வுகளோடு
உயிர் படைத்து -ஆகாரம் இன்றி
தோற்றம் பெறுகின்றதே

@@@சாகரமும் அள்ளிச் செல்ல
இயலாத வித்தையாக
மாருதமாய் புரவி வேகம் கொண்டு
வைகல்தோறும் திரிகிறதே
தீர்க்க முடியாத ஏக்கங்களை நினைவாக சுமந்து

@@@இடுக்கண் தடுத்தாலும்
கணை போல கருணை இன்றி
விசும்பு முழுதும் சோரி மூலம்
கவி வடித்து களிப்படைகிறதே
முறுவல் கொஞ்சும் செவ்விதழ் கொண்டு

@@@பொய்கையில் வீற்றிருக்கும் அம்புயமும்
உறக்கம் இன்றி மதுகரம் தனைத் தீண்ட
வருவதை எண்ணி காத்திருப்பது போல

@@@காற்றில் கலந்த கந்தமாய்
சாபங்கலான வேதங்கள் கூறி
புழுதி பறக்க ஊழியம் செய்கிறது
சிதைவு இன்றி சிநேகமாய்
வர்ணம் தீட்டி

@@@சொன்ன வாக்குகளை நிறைவேற்ற
மாட்சியடைந்து வசை இன்றி
சபையாக திரள்கிறது
பொழில் நிறைந்த தேறலாக
அமுதம் சிந்தி

@@@வார்த்தைகள் இன்றி சைகைகள் செய்து
செழிப்பாக செருக்குடன்
சுழல்காற்றுப் போல எண்ணங்களை திரட்டி
காலத் தடம் பதிக்கின்றது

@@@இரண்டறக் கலந்த இதயம்
ஒன்றாய் பிரிந்ததை நினைத்து
கொடுமைகள் சுமந்து
கைம்மாறாக உரக்கப் பேசுகிறதே
மெளன மொழி வீசி

@@@உதிரம் வழியும் உதடுகள்
உருசித்து பார்க்கின்றது
தன்னை விட்டு நீங்கிச் சென்ற காதல்
மாறாமல் இருக்கின்றதோ என்று

@@@கேளிக்கையான மறு பக்க காதல்
தன் தூய்மை இழந்து
மீண்டும் மன்றாடிக் கொண்டு இருக்கின்றது
இன்னொரு மெய்யில் மறைந்த
பொய்மையான காதலுக்காய்

@@@வையகம் முழுதும் காதல் ஏமாற்று வைரசு
வைபோகமாய் தங்கி வாழுகின்றது
முன் இறந்த காதலை மறந்து
பின் பிறக்கும் காதலை எண்ணி
அகம் மகிழ்கின்றது

@@@பார்ப்பான் பார்க்க மாட்டான்
என்று ,ஆனால்
உன் முன்னைய உண்மைக் காதல்
கண்காணித்துக் கொண்டு தான் இருக்கும்

@@@ FEBUARY பதின்னான்காம் பக்கத்தைப் புரட்டி @@@

எழுதியவர் : கீர்த்தனா (7-Feb-15, 7:49 pm)
பார்வை : 96

மேலே