என் காதல் களம் -1

நிலவோடு என் நிலவோடு
கதை பேசிய காலம் –அது
எத்தனை மனிதனின்
கனவு காலமோ! –என்
காதல் களம்...

மனிதம் சொல்லிய
வரலாற்று வரையறை- இது
பல காதலின்
மூத்த கருவறை – அவள்
அவள் விழிப்பார்வை...

காதலில் மூத்த குடிமகனாய்
முத்தம் கேட்டேன்
முத்ததினை அவள்
மொத்தமாக கொடுத்ததில் -என்
கன்னம் கைப்பேசியோடு
சண்டையிட்டது கொஞ்சமே! - அதை
உதடும் மிஞ்சியது
கண்களும் கொஞ்சம் கெஞ்சியது...

அவள் ஏக்கப்பார்வை என் சுகமான போர்வை
புரிந்தது போதை ஓர் விதமான பேதை -அதில்
மது கொடுதாள் என் மதி கழன்றது – பல
வித்தை செய்தாள் என் கண்விழி சுழன்றது;

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (7-Feb-15, 8:26 pm)
பார்வை : 96

மேலே