தித்திக்குதே

நினைக்கையில் தித்திக்கிறது.. அந்த
நிமிடங்கள் , நேரங்களை
நினைக்கையில் தித்திக்கிறது,
நிதானமிழந்த நொடிகள் யாவும்
நினைவில் இருக்கிறது..
நீயும் நானும்
நீண்ட நேரம் பேசி கழித்த
நீள இரவுகள் நெஞ்சின்
ஓரத்தில் இனிக்கிறது...
நாமிருவரும் ஒன்றாய் ஒரு
நாள் ,
நடைப் பயணம் போகும் போது, எதிரே
நின்றவளை நீ பார்க்காமல் போனபோது,
"நல்லா இருக்குல அந்த பொண்ணு" என
நக்கலாய் கேட்ட போது, கோபமாய்
நீ பார்த்த பார்வையை இப்போதும்
நினைத்தாலும் தித்திக்கிறது.. உனக்கு
நினைவிருக்கும் என நினைக்கிறேன்..
நான் அடம் பிடித்து ,
நீ வாங்கித் தந்த பனிக்கூழை
நிதானமின்றி நான் பிரிக்க அதுவும்
நிதானமிழந்து கீழே விழுந்து விட,
நான் ஏக்கமாய் உனை பார்க்க ,
நீ வேகமாய் சிரித்திட்டாய்.. அந்த
நொடியில் நான் குழந்தைப் போல் கோபிக்க,
நீ செல்லமாய் என் தலையைக் கொட்டியது
நினைவிருக்கிறது... இப்போதும்
நினைக்கையில் தித்திக்கிறது.......
நீ இன்று வருகிறாய் என தெரிந்து,
நான் அவசரமாய் கிளம்பி வந்த போது,
நீ வாங்கித் தந்த , நீல
நிற காதணிகளை அணிந்து வர
நினைத்து, அதில் ஒன்றை மட்டுமே அணிந்து
நான் வர ,
நீ எனக்கு மீண்டும் ஒன்றை வாங்கிப் பரிசளிக்க
நான் " ஏன் புதுசா ஒன்னு ?
நீதான் ஏற்கனவே" எனச் சொல்லி காதைக் காட்ட
நினைக்கையில் , காதணி இல்லாத்தை அறிந்து
கீழே தேடிட
நீ என தோளைப் பிடித்து ,
" நீ நிதானமா இருக்க மாட்டியா? தோடு வீட்ல தான் இருக்கோ, இங்க தேடாதே, இதைப் போட்டுக்கோ " என
நீ நிதானமாய் கூறிட , என் விழிகள் நீரில் குளிக்க
செல்லமாய் நீ கட்டி அணைத்ததை இப்போது
நினைத்தாலும் தித்திக்கிறது.....
நீ தந்த , இனி தரப் போகும்
நினைவுகள் என்றுமே என்
இதயச் சுவரை அலங்கரிக்கும்...உன்னை என்றும்
நேசிப்பேன்.......