என் காதலி!
பலநாள் அவளை
பேருந்து நிலையத்தில்
தூரமாய் சந்தித்திருந்தேன்!
சூரியன்
யாவருக்கும் பொதுவாய்
ஒளியை வழங்குவதுபோல்
அவளின்
அழைப்பும் சிரிப்பும்
அழகும் செழிப்பும்
அனைவருக்கும் பொதுவாய்!
அவள்தான் என் காதலி!
எத்தனை நபர் வந்தாலும்
அத்தனை நபரையும் திருப்தியாய்
அனுப்பும் அழகு தேவதை!
கடவுளால்
பூமியில் யாவருக்குமென
அனுப்பப்பட்ட காதல் தேவதை!
காமக் கொடூரர்களின்
காமத்தைத் தணிக்கும்
காதலியாய் அவள் இருப்பதால்
கற்பழிப்புகள் - நாட்டில்
கட்டுப்படுத்தப்படுகின்றன!
அவள் வேசிதான்!
அவள் அரவணைப்பு
பேதமில்லாமல் யாவருக்கும்!
அவளை
அடித்துக் கொன்றதாக
அறிய வந்தேன்!
இருப்பினும்
அவளைக்காண தினந்தோறும்
பேருந்து நிலையத்தில்
தூரமாய் காத்திருக்கிறேன்!