நண்பர்கள்

நீருக்கு தெரியுமா
ஆனால் செடிக்கு தெரியும்
தன்னை அறியாமல்
என்னை வளர்ப்பவர்கள்..

மலையில் ஏறியதைப் போல
உவகை கொள்வர் என் வெற்றிக்கு..
ஏறவைத்தது அவர்கள் வார்த்தைகள் தான்
என தெரியாமல்..

தொட்டாச்சிணுங்கி ஆக இருந்த என்னை
தொட்டால் ஒட்டிக்கொள்ளும்
வண்ணபூச்சி ஆக்கினர்..

அவர்களே என் நண்பர்கள்..

எழுதியவர் : கிரிஜா (21-Apr-11, 7:44 am)
சேர்த்தது : கிரிஜா
Tanglish : nanbargal
பார்வை : 414

மேலே