என் பெயர் புத்தன் ???
தமிழ்த்தாயின் கரம் பற்றி வளர்ந்த
ஈழத்தாயின் மண்ணில் பிறந்த பாவத்திற்காக
ஈழப்பெண்கள் வேட்டையாடப்படுவதை
பார்த்து நான் புன்னகைத்துக் கொண்டிருந்தேன் !
தமிழச்சி என்று தமிழை இதையத்தில் சுமந்ததால் மார்பு அறுத்தெறியப்பட்டு உயிர் துறந்த தமிழச்சிகளின் இமை
கண்டு நான் புன்னகைத்துக்கொண்டிருந்தேன் !
தமிழைத் தன் நாவில் ஏந்தியதர்காக
நா துண்டாக அறுத்தெறியப்பட்டு
துடிதுடித்த தமிழினைக் கண்டு
நான் புன்னகைத்துக்கொண்டிருந்தேன் !
ஈழம் அமைவதை பார்த்து விடுவாள்
என்ற பயத்தால் பிய்த்து எறியப்பட்ட
அப்பாவித் தமிழனின் கண்களைக் கண்டு
நான் புன்னகைத்துக்கொண்டிருந்தேன் !
தமிழனின் தமிழ் கலந்த உதிரமும்
தமிழச்சியின் தமிழ் கலந்த தாய்ப்பாலும்
தெருவில் ஆறாய் ஓடியபோதும்
நான் புன்னகைத்துக்கொண்டிருந்தேன் !
ஒன்றுமறியா பச்சிளம் பள்ளிக் குழந்தைகளை
கொத்துக் குண்டுகள் போட்டு கொன்று குவித்தபோதும்
நான் புன்னகைத்துக்கொண்டிருந்தேன் !
அமைதிக்காக வெள்ளைக் கொடி ஏந்தி வந்தபோதும்
வெண்மையை உதிரத்தால் சிகப்பாய் மாற்றி
அற்ப்பமாய் கொண்டாடிய கொலைகாரர்களைக் கண்டு நான் புன்னகைத்துக்கொண்டிருந்தேன் !
உயிருள்ள போதும் சவமாய் திரியும்
ஈழத்தமிழ் மக்களின் கண்ணீர் என் கண்களை
நனைக்கும் பொழுதும்
நான் புன்னகைத்துக்கொண்டிருந்தேன் !
என் பெயர் புத்தன்!!!!!!!!!