+நெஞ்சு பொறுக்குதில்லையே+மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி+

வஞ்சத்தில் இருப்பவனோ பன்னீருடன்
பஞ்சத்தில் தவிப்பவனோ கண்ணீருடன்

ஏமாற்றி சம்பாதிப்பவன் விமானத்தில் பறக்க
ஏமாறிய எளியவனின் மானமே பறக்க

சோறு போடும் கூட்டத்திற்கே சோறு தண்ணி சொந்தமில்ல!
உடையைத் தைக்கும் மக்களுக்கோ
கிழிந்த உடையே சொந்தமிங்கே!

கடலுக்கு பொழைக்க போறவன்
கடலோடே போனாலும், கடத்தப்பட்டு போனாலும்
கரையில் இருக்கும் எவனும் கவலைப்படுவதில்லை!

அவன் பிடிக்கும் மீன் மட்டும் வேண்டும்
ஆனால் அவனுக்கொரு நல்வாழ்க்கை வேண்டாமா!?

எத்தனைதான் தப்பு செய்தாலும்
பணமிருக்கா கவலை விடு!
கோவிலுக்கு போகும்போது காசிருக்கா
முதல் தரிசனம் உனக்கே!

கொடுமை செய்ய துணிந்தவன்
இரக்கத்தை குடித்து மனிதத்தை தின்றிருக்கிறான்....

மனச மட்டும் அடகு வைத்தால்
மகிழ்ச்சியுடன் வாழலாம்.. மனசிருந்து நினைத்துப்பார்த்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Feb-15, 10:15 am)
பார்வை : 328

மேலே