துணையின் துரோகம்

வெடித்து சிதறி வேதனையில் வெம்பி
கசங்கி துடித்து கிடந்து கதறும்
அவளின் நிலை

யாருமற்ற தீவில் தனித்து விட்டு
விச ஜந்துக்களைக்கொண்டு மேனியை
பிச்சு தின்னவைக்கும் விரோதசெயல்

தலையருகே சூரியன் வந்தமர்ந்து
தட்டு தட்டாய் நெருப்புச்சூடள்ளிக்கொட்டி
அனலில் தகிக்கவைக்கும் குரோதச்செயல்

காலடியில்பூமி கசங்கும் கோலமாய்
கானல்கள்கூட கைகொட்டி
காரி உமிலச்செய்யும் அருவறுபானச்செயல்

சங்கு தேய்க்க பூதம் வந்து
சரம் சரமாய் வசைகள் தந்து
சங்கடங்களையும் சந்தேகமாக்கிய ஈனச்செயல்

அழகியவைகளுக்குள் அகோரம் ததும்பிட
அமைதிக்குள் தீப்பிளம்பு கொதித்திட
துணை இணைவைத்த வன்மச்செயல்

அன்பு உளியெனச்சொல்லி
ஆன்மாவை செதுக்குவதுபோல் குதறி
ஆரா ரணமாக்கும் பாதகத்தையெல்லாம்

யாரால் செய்யமுடியும்?

மாலையிட்டு மணகோலம்பூண்டு
திருமண பந்தத்திலிணைந்து
மஞ்சத்தில் மிச்சம் வைக்காமல்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து

இன்னல்களிலும் வலிபொருந்தேனும்
தாம்பத்திய உறவுகளில் சுகமும் தந்து
குடும்ப வாழ்வை பொருப்பெடுத்து
குழந்தை குட்டிகளாய் போனபின்பும்

குறைகளில்லா வாழ்வு கொலுயேற்றிருந்தும்
குதூகல நிறைவு கைகுலுக்கி நின்றும்
என்னை மறந்து வேறு துணைதேடும்
உன்னைத் தவிர....

[அவளின் குமுறல் என்னெழுத்தில்]

எழுதியவர் : அன்புடன் மலிக்கா (8-Feb-15, 1:05 pm)
பார்வை : 68

மேலே