ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி

அன்பின் வழி வந்த
அழகிய உணர்வுதானே காதல்
அதற்கெதற்கு அதனை திருமணமாவ(ன)ர்க்கு என்று சொல்லி
அந்தப் பக்கம் வைக்கீறீர்கள்?

உயிரெல்லாம் உணர்வாலே உணர்ந்திடட்டும்
உங்களுக்குள் என்ன பேதம்? என்ன கோபம்?
உள் மனதில் அன்பதுவும் ஊற்றெடுத்தால்
உண்மை உறவுகள் தானே உயர்ந்திடும்..!

நல் உறவுகளைக் காதலிப்போம்
நல்லதோர் சமூகம் உருவாக்குவோம்..!
காதலுக்கு என்ன பஞ்சம்?
காரணங்கள் காட்டி தள்ளி வைப்பதேனோ?

இதயம் செய்யும் அன்புக்கு
இனிய பெயர் காதல் என்பர்..!
இம் மண்ணில் வாழும் உயிர் மேல் எல்லாம்
இனிய காதல் மணம் பரவி புதிய வாசம் வீசட்டும்..!

உயிர்மேல் காதல் கொள்வோம்
உயிர் தந்த அம்மா தொடங்கி சிறு உயிர் வரை
அனைவர்க்கும் பொது காதல் அன்பென்றபடியாலே
ஆதலினால் காதல் செய்வீர்…!

எழுதியவர் : சச்சிதானந்தம் கஜன் (8-Feb-15, 4:20 pm)
சேர்த்தது : கஜன்
பார்வை : 47

மேலே