ஆதலால் காதல் செய்வீர் -மண் பயனுற வேண்டும்

சாத்திய மனங்கள் சாத்தியம் ஆகிட
பாலுக்குள் நுரையாய் பதுக்கிய
சாதி மதம் சாய சாவிகள் உண்டா ??
சீதனம் சிசுக்கொலை இல்லாமல் போக
பூவுக்குள் மணமாய் பூட்டி கிடக்கும்
நூதனமாய் செல்ல நோவும் கொடுக்கும்
காதல் மட்டும் இங்கு கையுண்டு
அதலால் நீயும் காதல் செய்
அந்நிய மொழிவந்துஆட்சி நடத்துது
அன்னையின் மொழி மாட்சி மறையுது
கருவறை சுவர்தாண்டி காதில் பட்ட
தாய் மொழியை கொஞ்சம் காதல்செய்
பஞ்சபூத சக்தியெல்லாம்
பதுக்கி வைத்த பூமியில
தஞ்சம் வந்த மனுசகூட்டம்
நஞ்சு கலப்பது என்ன நியாயம்
அதலால் இயற்கையை காதல் செய்
இதய ஆழத்தில் இசைக்கும் நாதத்தில்
சாதல் வரும் வரை காதல் செய்