நெஞ்சு பொறுக்குதில்லையே… - மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி
சமூகத்தைப் பார்க்கிறேன் சாக்கடையாய் தெரிகிறது
சட்டங்கள் எல்லாமே எழுத்தோடு மற(/றை)ந்ததுவே?
களைவதற்கு நிறையவுண்டு – ஆனால்
களைவதற்குத்தான் யாருமில்லை..!
என் பாட்டன் பாரதி கண்ட கனவு - இன்றும் கனவாய்
எண்ணிப் பார்க்க முடியா எட்டா தூரத்தில்
ஏன் இந்த நிலை? எதனால் இந்த நிலை?
எண்ணிப் பார்ப்பதற்குள் இன்னும் கொடூரமாய்…
பாலியல் பிரச்சினைகள் இன்னும் தொடர்கதையாhய்
போதை பாவனைகள் போகாத நமை விட்டு
புதிய தலைமுறைக்கு புகுத்துவது இதைத்தானே? – சமூக
புண்களை ஆற்ற வழியேதும் இல்லையோ?
தடம் மாறி போகிறோம் நாம் - அதை
தரம் தரம் என்று சொல்லி தறி கெட்டு போகிறோhம்
சிந்தனை உள்ள இளம் சமூகம்
சிரிக்கத்தான் முடிகிறது இதை சொல்கையில்
நெறி தவறி நடக்கையில்
நெறிபடுத்துவோர் எல்லாம் தெறி கெட்டு – கடும்
நெருப்பில் அமிழ்கிறது நம் சமூகம் நினைக்கையிலே
நெஞ்சு பொறுக்குதில்லையே…!