நெஞ்சம் பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

உலகிற்கே தாயான ஒருத்தி கண்
கலங்கி தீயென இருக்கிறாள் – தன்
வளமெல்லாம் வாரிக்கொண்டு தன்னை
மலடாக மாற்றியதற்காய் தவிக்கிறாள்.....

சுமை தாங்காமல் சிணுங்குகிறாள் காலமெல்லாம்
இமை மூடும் பிரசவ வலியுடனே – அவளுக்காய்
பலசண்டைகள் அன்று எமனுக்கோ குதுகலம் இன்று
அவளோடே சண்டை என்ன விந்தைகள்....

பயிர் வளர்க்கின்றனர் செயற்கை உரத்தில் –அவளின்
உயிரோ ஒவ்வோறு இரத்த துளியாய் கசிந்துருகுகிறது
கோபம் காட்டுகிறாள் கண்ணிப்பெண் வாய்பிளைந்து – இருந்தும்
மோகம் குறையவில்லை அபலைப்பெண்ணின் கதறல்களால்

கடைசி மூச்சிற்காய் ஏங்கி நிற்கிறாள் – தன்
கடைக்கண் நீரை வடிக்கிறாள் – பூமித்தாயின்
கண்ணீரை பூமனம் தான்தாங்கிடுமோ அவளின்
இன்னல் கண்டு நெஞ்சம் பொறுக்குதில்லையே....

தாயைக் கொன்று தனக்கென வாழும்
மாயை சூழிந்த உலகமடா – இது பிறர்
இரத்தம் உறீஞ்சி தத்தம் உயிரை
நித்தம் வளர்க்கும் வர்க்கமடா.....
நம் மண்ணையும் கொஞ்சம் நினையுமடா......

எழுதியவர் : தமிழ் kiruk (8-Feb-15, 9:28 pm)
பார்வை : 76

மேலே