நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும்
விளைநிலம் விலைபோகும் போது,
பசியில் விவசாயி வாடும் போது,
மாதரை தரம் தாழ்த்தும் போது,
தீவிரவாதம் தலை தூக்கும் போது,
பொறுக்குதில்லையே...நெஞ்சு பொறுக்குதில்லையே.!
கல்விக்கு விலை நிர்ணயிக்கும் போது,
காமன்கள் சீதைகளை சூரையாடும் போது,
பச்சிளம் குழந்தைகள் கையேந்தும் போது,
ஏழைகளின் கண்ணீரை காணும் போது,
பொறுக்குதில்லையே...நெஞ்சு பொறுக்குதில்லையே.!
வனங்கள் அழியும் போது,
வளங்களை பதுக்கும் போது,
அதிகாரம் ஆளுமை நடுநிலைமை தவறும் போது,
கையாளற்ற மனிதனாய் வாழும் போது,
பொறுக்குதில்லையே...நெஞ்சு பொறுக்குதில்லையே.!
கலாச்சாரம் கலைந்த மேகமாய் போகும் போது,
வரலாறு அழிந்த ஓவியமாய் ஆகும் போது,
இளைய சமுதாயம் பாதை மாறும் போது,
தமிழை மறக்கும் மேதைகளை காணும் போது,
பொறுக்குதில்லையே...நெஞ்சு பொறுக்குதில்லையே.!
ஃதங்கம்