இரவின் நிறங்களில்

சமயலறையில்
சொட்டுச் சொட்டாக
விழும் நீர்த்துளி
பெரும் நிசப்தத்தை
கிழித்துக் கொண்டிருந்தது.
மற்றொரு அறையில்
மின்விசிறி லேசான
காற்றைத் தூறிக் கொண்டிருந்தது.
சுவாசக் கலவையும்
சிகரெட் புகையும்
ஜன்னலில் வெளிநுழைந்து
பறக்கத் துவங்கியிருந்தது.
காலியான உற்சாகக்
கோப்பையும்
காலியாகாத உணவுக்
குப்பையும்
நடுவறையில் சிதறியிருந்தது.
நேர்த்தியாக விரிக்கப்படாத
விரிப்புகளின் ஓரத்தில்
உலக சலனங்களைக்
கிறுக்குமொருவன்
இரவின் நிறங்களில்
புதையத் துவங்கியிருந்தான்.